உலகில் உயிர்வாழ்ந்து வந்த இறுதி ஆண் வெள்ளை காண்டாமிருகமான “சூடான்” கென்யாவில் உயிரிழந்துள்ளது.
கென்யாவிலுள்ள வனவிலங்களுக்கான தனியார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உலகின் இறுதி வெள்ளை ஆண் காண்டமிருகம் இறந்துவிட்டது. 45 வயதான சூடானுக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலையில் சரிவு காணப்பட்டது.
இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல் உபாதைகள் இருந்தன.
தசை மற்றும் எலும்புகள் மோசமான அளவில் பாதிக்கப்பட்டிருந்தன. தோலில் காயம் ஏற்பட்டிருந்தது. கடந்த மாதமளவில் அதன் நிலைமை மிக மோசமாகியது.
அதனால் எழுந்து நிற்க முடியாத நிலைமை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதனை கருணைக் கொலை செய்ய முடிவு செய்தோம்.
கடந்த சில மாதங்களாக சுடானை உயிருடன் வைக்க நாங்கள் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது” என்று குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடான் இரண்டு வெள்ளை பெண் காண்டாமிருகங்களான நஜின், பட்டு ஆகியவற்றுடன் வசிந்து வந்தது.
சூடானில் பிறந்தது இந்த வெள்ளை ஆண் காண்டாமிருகம். உலகிலேயே மூன்று வெள்ளை காண்டாமிருகங்கள் தான் உள்ளன. அவற்றில் இரண்டு பெண் காண்டாமிருகங்கள் ஆகும்.
சூடான் மட்டுமே ஆண். 2009 ஆம் ஆண்டு கென்யா வந்த இந்த சூடான் மூலம் வெள்ளை காண்டாமிருகங்களை இனப்பெருக்கம் செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அவற்றில் பலன் ஏதும் இல்லை.
இந்த நிலையில் சுடான் உயிரிழந்துள்ளதால் அந்த இனத்தில் இரண்டு பெண் காண்டா மிருகங்கள் மட்டுமே தற்போது உலகில் உள்ளன.
சுடானின் இந்த இழப்பு வனவிலங்கு ஆர்வலர்களிடம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.