பிரதான செய்திகள்

வீடு என்று முல்லைத்தீவு மக்களை ஏமாற்றிய அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்.

முல்லைத்தீவு, பிலக்குடியிருப்பு கிராம மக்களுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாஸவினால் வழங்கப்பட்ட 47 நிரந்தர வீடுகள் இன்னமும் தமக்கு கிடைக்கப்பெறவில்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

2017ஆம் ஆண்டு 8ஆம் மாதம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் குறித்த வீடுகள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் அந்த 47 நிரந்த வீடுகளையும் கட்டிக்கொடுக்கும் நோக்குடன் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஆகியோரால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும், குறித்த வீடுகளின் கட்டுமானம் தொடர்பில் இதுவரையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Related posts

பாதணியினை சுத்தம் செய்ய வைத்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர

wpengine

பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் மஹிந்த விஷேட சந்திப்பு!

Editor

குற்றங்களை ஒப்புக்கொண்டு விக்னேஸ்வரன்

wpengine