பிரதான செய்திகள்

இனவாத செயலை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கண்டியில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை கண்டிக்கும் வகையில் இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

தேசிய நல்லிணக்கத்துக்கான செயலணி, பிரஜைகள் சமாதான சபை என்பவற்றுடன் இணைந்து முஸ்லிம் உரிமைகளுக்கான கூட்டமைப்பு இதனை ஏற்பாடு செய்துள்ளது.

வௌ்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் பம்பலப்பிட்டி பள்ளிவாசல் அருகே தொடங்கும் ஆர்ப்பாட்டம் ஊர்வலமாக தும்முல்லை சந்தியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தைச் சென்றடையவுள்ளது.

அதன் பின்னர் கண்டியில் நடைபெற்ற இனவன்முறைகளினால் அழிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் ஏனைய சேத விபரங்களுடன் கூடிய தகவல் அறிக்கை மற்றும் இனவாத செயற்பாடுகளை நிறுத்துவதற்கான சர்வதேச தலையீட்டை வலியுறுத்தும் கோரிக்கை மகஜர் என்பன ஐ.நா. அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளது.

Related posts

நீதிமன்றால் தேடப்படும் உதயங்க ஜப்பானில் வைத்து பிரதியமைச்சருடன் செல்பி

wpengine

வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினை! சீ.வி. விக்னேஸ்வரன் முற்றுகை

wpengine

கடல் பசு இறைச்சியுடன் மன்னாரில் ஒருவர் கைது..!

Maash