உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

13,570 கோடி மோசடி செய்த மோடி

மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவரது உறவினர் மெகுல் சோக்ஷி. இவர்கள் இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,700 கோடி வரை கடன் பெற்று, அந்த கடன் தொகையை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி ஓடினர். 

இது தொடர்பாக சி.பி.ஐ. அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை போன்றவை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் 12,646 கோடி மோசடி செய்ததாக கூறப்பட்டது. அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த வங்கியில் கூடுதலாக 942 கோடி வரை மெகுல் சோக்ஷி நிறுவனம் மோசடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தற்போது மோசடி தொகை 13,570 கோடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல் டெல்லியைச் சேர்ந்த வைர நகை நிறுவனமான துவாரகா தாஸ் இன்டர்நேஷனல் ஓரியண்டல் வங்கியில் 385.85 கோடி மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் டெல்லியைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்கள் பேங்க் ஆஃப் பரோடாவில் 6,000 கோடி மோசடி செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

வங்கிகளில் கடன் பெறும் தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று தலைமறைவாகி விடுகின்றனர். இதனால் வங்கிகள் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் இழப்பை சந்தித்து வருகின்றன.

இந்நிலையில் எல்.ஓ.யு என்ற கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பல ஆயிரம் கோடி வங்கி மோசடியை அடுத்து கடன் உத்தரவாத கடிதம் முறையை ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடியின் மோசடியை தொடர்ந்து ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பத்திரிக்கை ஆசிரியர் சுட்டுகொலை!

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் -அஸாத் சாலி

wpengine

அமீர் அலி தலைமையில் ஐ.தே.க.மனு தாக்கல்

wpengine