பிரதான செய்திகள்

வவுனியாவில் 17 கிராம சேவையாளர் வெற்றிடம்

வவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுவதாக பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வவுனியா பிரதேச செயலக பிரிவில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. குறிப்பாக எமது பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடம் காணப்படுகின்றது.

இந்த ஆளணி நிரப்பப்படாமையால் எமது சேவைகளை இலகுவாக செயற்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் கிராம அலுவலர் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பேஸ்புக் காதல்! 55 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை

wpengine

மே மாதம் சம்பளம் பெறாத 7500 அரச ஊழியர்

wpengine

சஜித் அணியில் இருந்து 3பேர் மஹிந்த அரசு பக்கம்

wpengine