தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் பதிவேற்றம் இருவர் கைது

இணையத்தளத்தை பயன்படுத்தி இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில்
மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் ஹோமாகமை மற்றும் மினுவாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாணவர்கள் இருவரும் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கிறிபத்கொடை மாகொல இளைஞர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இனவாத ரீதியான கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தமைக்காக இதற்கு முன்னரும் இதே போன்று இருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தெய்வீக பிணைப்பை எடுத்துகாட்டும் ஹஜ் பெருநாள் ஜனாதிபதி

wpengine

மாக்கோல அநாதை நிலையத்தின் இப்தார் நாளை

wpengine

முஸ்லிம் பெண்களை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டாம்.

wpengine