புத்தளம் ஆனமடுவயில் இன்று அதிகாலை இனவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட மதீனா ஹோட்டல் சம்பவத்தைக் கேள்வியுற்று அந்தப் பிரதேசத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எம் எச் எம் நவவி விரைந்தார்.
பாதிக்கப்பட்ட ஹோட்டல் உரிமையாளரைச் சந்தித்து நிலவரங்களைக் கேட்டறிந்ததுடன் அந்தப் பிரதேச மக்களின் பாதுகாப்பு தொடர்பிலும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் சந்தித்துப் பேசினார்.
இதேவேளை கண்டியில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து புத்தளம் மாவட்டத்திலும் இனவாதிகள் தமது இனவாதச் செயற்பாடுகளைக் காட்டத் தலைப்பட்டுள்ளதாகவும் எனவே அந்த மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் வாழும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி அவர்களின் சொத்துக்களைப் பாதுகாக்குமாறு வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரிடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.