பிரதான செய்திகள்

கிழக்கில் கொந்தளிப்பு! பல பகுதிகளில் ஹர்த்தால் கடையடைப்பு!

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து பாரிய ஹர்த்தால் அனுஸ்டிப்பு கிழக்கு
மாகாணத்தில் பரவலாக இடம்பெற்று வருகின்றது.

இன்று (6) காலை கல்முனை மருதமுனை சாய்ந்தமருது சம்மாந்துறை அக்கரைப்பற்று நற்பிட்டிமுனை காத்தான்குடி அட்டாளைச்சேனை உள்ளிட்ட இடங்களில் ஒன்று கூடிய மக்கள் பிரதான வீதிகளை மறித்து ரயர்களை எரித்ததை அவதானிக்க முடிந்தது.

மேலும் இப்பகுதிகளில் முப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை காண முடிகிறது.

மேலும் பல முஸ்லிம் பிரதேசங்களில் பூரண ஹர்த்தாலுடன் கடையடைப்பும் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றது.

இதனால் குறித்த பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், கடைகள் போன்றன மூடப்பட்டும், வைத்தியசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் யாவும் இஸ்தம்பித நிலையில் காணப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேவையான பலத்தை பயன்படுத்த பொலிஸார்,ஆயுதப்படைகளுக்கு அதிகாரம்

wpengine

கட்டார் விவகாரம்: சமரச முயற்சிகளில் குவைத், துருக்கி

wpengine

21 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பதா இல்லையா

wpengine