பிரதான செய்திகள்

மன்னாரில் இருந்து கச்சதீவு நோக்கி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு மன்னார் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் படகுகள் மூலம் பயணமாகியுள்ளனர்.

தலைமன்னார், பேசாலை, பள்ளிமுனை, கோந்தைப்பிட்டி கடற்பகுதியூடாக மக்கள் படகுகள் மூலம் கச்சதீவை நோக்கி பயணமாகியுள்ளனர்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று இடம் பெறவுள்ளன. நேற்றையதினம் கொடிதினத்துடன் திருவிழா ஆரம்பமானது.

இம்முறை இலங்கை, இந்தியாவை சேர்ந்த பத்தாயிரம் அடியார்கள் கச்சதீவு சென்று பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

Related posts

லங்கா சதொச அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்தது!

Editor

கல்வி சமூகத்தினை மென்மேலும் உயர்த்த வேண்டும் அடைக்கலம் பா.உ

wpengine

தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு! பெப்ரல் அமைப்பு

wpengine