Breaking
Sun. Nov 24th, 2024

இலங்கை நாட்டின் இரண்டாம் நிலை உயர் பதவிகளில் ஒன்றான பிரதமர் பதவியில் ஏறி அமர்ந்துகொண்டு, அதிலிருந்து ஜனாதிபதியால் துரத்தப்படுகின்ற போதும், சட்டத்தை காரணம் காட்டி, சிறு பிள்ளைகள் முட்டாசுக்கு அடம்பிடிப்பதை போன்று அவமானம் வேறு எதுவுமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

ஒவ்வொரு பதவிகளுக்கென்றும் ஒவ்வொரு கௌரவம் உள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில், அந் நாட்டின் ஜனாதிபதி முதல் நிலை அதிகாரம் கொண்டவர். இரண்டாம் நிலை பதவியாக பிரதமர் பதவியை குறிப்பிடலாம். ஜனாதிபதியே பிரதமரை நியமிப்பார். அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமித்திருந்தார். இப்போது அவரை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அது எந்தளவு என்றால், பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிக்கு உள்ளதா என ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன உயர் நீதிமன்றத்திடம் சட்ட ஆலோசனை கோரியுள்ளார்.

சட்டத்தின் அடிப்படையில் ஜனாதிபதியினால் பிரதமரை நீக்க முடியுமோ இல்லையோ, அவர் நியமித்த அதிகாரத்தை, அவர் இராஜினாமா செய்ய கோருகின்ற போது, மறு பேச்சு பேசாமல் இராஜினாமா செய்வதே கெளரவமாகும். பின்னர் தனது பலத்தை ஜனாதிக்கு வெளிப்படுத்தி, அவரது ஆட்சியை சவாலுக்குட்படுத்தி இருக்கலாம். அதை விடுத்து, சிறு பிள்ளை முட்டாசு கேட்டு அடம்பிடிப்பது போன்று, சட்டத்தை காட்டி அந்த பதவியில் நீடிக்க கோருவதை கேவலம் வேறு எதுவுமிராது.

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வாராக இருந்தால், ஐக்கிய தேசிய கட்சிக்காரர்களில் இன்னுமொருவரை பிரதமராக நியமிக்கும் முயற்சிகள் இடம்பெறும். அந்த முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில், அவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பொறுப்பை மிக இலகுவில் கைப்பற்றிக்கொள்வார். இதற்காகத் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அடம் பிடிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதன் மூலம், இயலாத ஒருவரின் கையில் இலங்கை நாட்டின் இரண்டாம் நிலை பதவியான பிரதமர் பதவி அகப்பட்டு, அசிங்கப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்துகொள்ளலாம். ஜனாதிபதி, பிரதமரை பதவியை நீக்குதலில் சட்ட சிக்கல் இல்லாவிட்டால், பல ஐக்கிய தேசிய கட்சியினர் எம்மோடு கைகோர்த்திருப்பார்கள். இப்போது எங்களோடு வந்து இணைவதில் வேலை இல்லையே? இதில் மேலும் பல இராஜதந்திர விடயங்கள் உள்ளன.

பிரதமர் பதவி அசிங்கத்துக்குள்ளாவது முழு இலங்கை நாட்டுக்குமே அவமானமாகும். இம் முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எங்களை பெரும்பான்மையாக ஆதரித்து, அவர்களது இயலாமைகளை புலப்படுத்தியது போன்று, மக்கள் பிரதமர் பதவியின் கௌரவத்தை காக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *