Breaking
Thu. Nov 21st, 2024

புத்தளம் நகர சபையின் ஆட்சியினை ஜக்கிய தேசிய முன்னணிக்கு தருவதன் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகளை கொண்டுவர முடியும் என தெரிவித்துள்ள கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சரின் இணைப்பு  செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா இந்த நாட்டில்  உள்ள முஸ்லிம் சமூகத்தினை ஏமாற்றி வாக்குகளை பிரித்து பொது எதிரணியனை திருப்திபடுத்தும் திறைமறைவிலான முயற்சிக்கு துணைபோய்விட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

புத்தளம் நகர சபைக்கு முதலாம் வட்டாரத்தில் ஜக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர் யூசுப் முஹம்மது நிஸ்தாரை ஆதரித்து தைக்காப் பள்ளி வளாகத்தில் இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ் தலைமையில் இடம் பெற்ற கூட்டத்தில் வேட்பளார்களான எஸ்.ஆர்.எம்.எம்.முஹ்ஸி,ஏ.ஓ.அலிகான்,முஹம்மது பரூஸ்,நுஸ்கி நிஸார் மற்றும் சட்டத்தரணி இப்திகார் முஹம்மத்,ஜக்கிய தேசிய கட்சியின் முகாமையாளர் மொஹிதீன்,புத்தளம் வர்த்தக சங்க முன்னாள் தலைவர் ஹினாயத்துல்லா உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மேலும் இர்ஷாத் றஹ்மத்துல்லா பேசுகையில் –

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது மக்கள் வழங்கிய ஆணையினை மறக்க முடியாது.அந்த மாற்றத்தினைால் தான் அச்சமற்றசூழ் நிலையில் இன்று மக்கள் வாழ்கின்றனர்.இந்த நல்லாட்ச்சிஅரசாங்கத்தில் ஜக்கிய தேசிய முன்னணி பெரும் பங்கினை வகிக்கின்றது.இன்று இந்த நகர சபை தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை நோக்குகின்ற போது,ஜக்கிய தேசிய முன்னணியின் யாணைச் சின்ன வேட்பாளர்கள் பலர் முன்னாள் நகர சபை உறுப்பினர்கள்,அனுபவமும் செயற் திறமையுமிக்கவர்.ஏனைய கட்சிகளின் வேட்பாளர்கள் தொடர்பில் உங்களால் மதிப்பட முடியும்.சமூகத்திற்கு பிரச்சினைகள் வருகின்ற போது இந்த இடத்தில் உடன்  ஆஜராகக் கூடியவர்கள் இவர்கள்.இதனால் தான் நீங்கள் ஜக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களிக்குமாறு கேட்கின்றோம்.

அண்மையில் புத்தளம் வெட்டுக்குளம் சந்தியில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்கள் ஜக்கிய தேசிய கட்சியின் தலைவரும்,பிரதமுருமான ரணில் விக்ரம சிங்கவை அழைத்து வந்து அபிவிருத்திகளை பெற்றுத் தருவதாக கூறினார்.புத்தளம் நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெறுமானத்தை மதிப்பிட்டதன் பிறகே இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஆட்சிக் கதிரைக்கு வர முடியாத கட்சிகளை புறந்தள்ளி பணியாற்றக் கூடிய நேர்மையானவர்களையும்,நல்ல சிந்தணை கொண்டவர்களையும் மக்கள் பிரதி நிதிகளாக தெரிவு செய்யும் நல்ல சந்தர்ப்பம் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி கிடைக்கவுள்ளது என்றும் இர்ஷாத் றஹ்மத்துல்லா கூறினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *