சமகாலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்தும் கோபத்தற்கான காரணத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
தற்போது அரசியல் மேடைகளில் முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் நகைச்சுவையை ஏற்படுத்துவதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.
தனது குடியுரிமையை இரத்து செய்ய யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.
எனக்கு என்ன நடந்தாலும் மக்களுக்கான தனது போராட்டம் கைவிடப்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஜனாதிபதிக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. எனது கூட்டத்தை பார்த்தவுடன் அவரது கோபம் மேலும் அதிகரிக்கின்றது.
எனது குடியுரிமையை பறிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம். எனது குடியுரிமை பறிக்கப்பட்டாலும், மக்களுக்கான போராட்டத்தை கைவிடப்போவதில்லை என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
வெல்லவாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற பொதுஜன முன்னணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த இவ்வாறு தெரிவத்துள்ளார்.