பிரதான செய்திகள்

ரணில் பதவி விலக வேண்டும்! ஊவா பிரஜைகள் சம்மேளனம்

தனக்கு எதிரான விசாரணைகள் நிறைவடையும் வரை மாகாண கல்வி அமைச்சு பதவியிலிருந்து விலகிய ஊவா மாகாண முதலமைச்சரை முன்னுதாரணமாக கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்று ஊவா பிரஜைகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

பதுளை நகரின் பாடசாலை அதிபர் ஒருவருக்கு புதிய மாணவர்கள் சேர்க்கை தொடர்பில் அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரையில் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மாகாண கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் முதலமைச்சரின் இந்த செயற்பாடு ஊவா மாகாணத்தில் அரசியலுக்கான முன்னுதாரணம் என்று ஊவா பிரஜைகள் சம்மேளனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஊவா மாகாண பிரஜைகள் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும்

தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாடசாலையொன்றின் அதிபருக்கு அழுத்தம் கொடுத்த விவகாரம் தொடர்பான பொய்க் குற்றச்சாட்டு விசாரணைகள் நிறைவடையும் வரை மாகாண கலவி அமைச்சர் பதவியிலிருந்து விலகிய முதலமைச்சர் சாமர சம்பத்தின் நடவடிக்கை தொடர்பில் ஊவா மாகாண பொதுமக்கள் பெருமைப்படுகின்றனர்.

இதேபோன்று மத்திய வங்கியின் பிணைமுறி மோசடிகள் தொடர்பில் பெரும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிணைமுறி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து முன்மாதிரியொன்றை வெளிக்காட்ட வேண்டும்.

அந்த விடயத்தில் அவர் முதலமைச்சர் சாமர சம்பத்தின் முன்மாதிரியை பின்பற்ற வேண்டும் என்றும் ஊவா மாகாண பிரஜைகள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

Related posts

கபீர் ஹாசீம் அமைச்சுப் பதவி குறித்து அதிருப்தி!

wpengine

குடும்ப பிரச்சினை கிணற்றிற்குள் குதித்த தாய் 2 பிள்ளைகள் மரணம்

wpengine

நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்யலாம்.!

wpengine