Breaking
Sat. Nov 23rd, 2024

அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண சில வெளிநாடுகள் உதவ முன்வந்துள்ளன.

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான கூட்டணி கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு இடையில் நிலவி வரும் முரண்பாட்டு நிலையை தீர்த்து வைப்பதற்கு பிரபல ராஜதந்திர தலையீடு செய்யப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களே இந்த ராஜதந்திர தலையீட்டுக்கு ஊக்கமளித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டால் அது உத்தேச அரசியல் அமைப்பு உருவாக்கத்தினை பாதிக்கும் என்பதனால் பிரச்சினைக்கு தீர்வு காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாட்டு தூதரகங்களிடம் கோரியுள்ளனர்.

இதன்படி, மேற்குலக நாடுகளின் முக்கிய நான்கு தூதரகங்களினது ராஜதந்திரிகள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி என்பனவற்றுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு முயற்சித்துள்ளனர்.

எனினும், இந்த இணக்கப்பாட்டு முயற்சியில் ஒரு தரப்பு இன்னமும் முழுமையாக இணங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *