பிரதான செய்திகள்

பாடசாலைக்கு ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

2018 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் விநியோகத்தை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்காக அடையாள அட்டைகளுடன் கூடிய சுற்று நிரூபத்தை க.பொ.த சாதாரண தர வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிர்வரும் வாரத்தில் அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக அறிவித்துள்ளார்.

அதன்படி அதிபர்கள் குறித்த சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய மாணவர்களின் பெயர் விபரங்கள் மற்றும்
புகைப்படங்களை மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் ஆட்பதிவுத் திணைக்கள பிரதான அலுவலகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பரீட்சை நெருங்கும் வேளையில் மாணவர்களின் அடையாள அட்டை பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் ஏற்படும் சிக்கல்களிலிருந்து தவிர்ந்து கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கெகுணகொல்ல அரபுக்கல்லூரி மாணவர் இருவர் நீரில் முழ்கி மரணம்

wpengine

தமிழ் நீதிபதிகளின் தீர்ப்பு பிழை எனக் கூறும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை நீதித்துறை கேள்விக்குறியே – சிறிதரன் MP

Editor

இலங்கையில் முதலீடு செய்ய சவூதி இளவரசர் அப்துல் அஸீஸ் இணக்கம்

wpengine