பிரதான செய்திகள்

பிற்பொக்கட் அடித்த ஜனாதிபதி

நாம் மஹிந்த ராஜபக்ஷவின் பையிலிருந்து பிற்பொக்கட் அடித்து தூக்கியவர்தான் தற்பொழுது ஜனாதிபதி கதிரையில் இருக்கின்றார் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொத்தடுவ, மாணிக்கமுல்லவில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறரா்.

இது குறித்துப் பேசிய அவர், சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களுக்கு இவர்கள் திருடர்கள் என்று கூறுகிறார்கள்.

இவர்களுக்கு அவர்கள் திருடர் என்று கூறுகிறார்கள் என சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கூறுவதைக் கேட்டேன். புறக்கோட்டையில் பணப்பையைத் திருடிக் கொண்டு ஓடும் திருடர் போன்று என்றும் அவர் கூறினார்.

ஆம், நாம் பிற்பொக்கட் அடித்தோம். நாம் மஹிந்த ராஜபக்ஷவின் பையிலிருந்து பிற்பொக்கட் அடித்து தூக்கியவர்தான் தற்பொழுது ஜனாதிபதி கதிரையில் இருக்கின்றார்.

அவர் பிற்பொக்கட் அடிக்கப்பட்ட ஒருவர் என்பது அவர்களுக்கு நினைவில் இல்லை. இவ்வாறு, பிற்பொக்கட் அடித்து ஜனாதிபதியாக மாற்றியது, இந்நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கே ஆகும்.

மஹிந்த ராஜபக்ஷவுடன் அப்பம் சாப்பிட்டு விட்டு அவருக்கு ஆப்பு வைத்தது போன்று எமது தயவால் ஜனாதிபதியாகி அடுத்த தேர்தலில் எமக்கே வேட்டு வைக்க இவர்கள் முனைகின்றனர் என்றார்.

Related posts

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்.

wpengine

மன்னார் நகர சபை,மன்னார் பிரதேச சபை எல்லைப்பிரச்சினை விசாரணைக்கு

wpengine

அமைச்சர் ஹக்கீம் தலைமையில்இன்று நிவாரண பணி (படங்கள்)

wpengine