“கிழக்கும் வடக்கும் இணைய வேண்டும், அதனால் பல அரசியல்வாதிகள் நன்மையடைய வேண்டும், மக்கள் இன்னல் படவேண்டும் என்ற விதத்தில் நடக்கும் நடவடிக்கையை ஒரு காலமும் எமது கட்சியும் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் பகிரங்கமாக அறிக்கை விடுத்துள்ளார்.
சிகரம் சர்வதேச வானொலியின் அரசியல் களம் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது கேட்க்கப்பட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
“கிழக்கு மக்கள் இன்று நிம்மதியாக சுதந்திரமாக அவர்களின் நிலங்களில் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களின் நிம்மதியைக் கெடுப்பதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். வடக்குடன் கிழக்கை இணைக்க வேண்டிய எந்த தேவையுமில்லை.
இணைப்பதனால் சிலர் நன்மையடைவதற்காக ஒரு சமூகத்தின் நின்மதியைக் குழப்ப முடியாது.
எனவே, மக்கள் கருத்துக்கள் கட்டாயம் கேட்கப்பட்டு, அது சம்மந்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.