(ஏ.எச்.எம். பூமுதீன்)
முகாவின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத் — தனியார் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசுகையில் ஆணித்தரமாக ஓர் உண்மையினை வெளிப்படுத்தியிருந்தார்.
“மாதாந்தம் சம்பளம் வழங்கி 24 பேர்களைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் – அவர்களின் பணி முஸ்லிம் காங்கிரஸிற்கு சமூக வலயத்தலங்களில் ஒருபக்கச்சார்பாக பதிவிடுவதற்கு ஆகும்.
அத்துடன்,இவ்வாறான கைக்கூலி பெறுகின்ற சமூக வலயத்தல எலுத்தளர்களின் விருந்துபசார ஒன்றுகூடல் Video வும் தன்வசம் உள்ளதாகவும் இவர்களின் விபரக்கோவைகளும் பெயர், ஊர், அடையாள அட்டை இலக்கத்துடன் தன்னிடம் இருப்பதாகவும் தேவை ஏற்படுகின்றபோது அவைகளை மக்களுக்கு பகிரங்கப்படுத்தவும் தயங்கமாடேன் என்றும் கூறினார்.”
ஜவாத் அவர்களின் இக்கருத்து தொடர்பில் நாம் முன்னர் ஒரு பதிவை வெளிப்படுத்தி இருந்தோம். அதனையும் தற்போதைய அவசியம் கருதி இங்கு பிரசுரிக்கின்றோம்.
(23 .02 . 2017 அன்று கீழுள்ள தலைப்பில் பிரசுரித்து இருந்ததை அவசியம் கருதி மீள் பதிவிடுகின்றோம்.)
ரிசாதுக்கு அவதூறு பரப்ப
விசேட குழு நியமிப்பு……!
———————————
அமைச்சரும் அ.இ.ம.கா தேசியத் தலைவருவமான ரிசாத் பதியுதீனுக்கு எதிராக அவதூறுகளை கட்டவிழ்த்து விடும் நோக்கில் விசேட இளைஞர் குழுவொன்று நியமிக்கப் பட்டிருப்பதாக நம்பகரமாக தெரியவருகின்றது.
கொழும்பு வொக்சேல் வீதியில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடமொன்றிலிருந்தே இந்த விசேட குழு அவதூறு பரப்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ரிசாத் பதியுதீனுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை இல்லாதொழிப்பதே இந்தக் குழுவின் விசேட பணியாகும்.
முழு நேரமாக செயற்படும் வகையில் இக்குழுவில் ஐவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முக நூல்களை உருவாக்குதல், வட்சப் குறூப்களில் போலித் தகவல்களை பரப்புதல், ரிசாத் தொடர்பாக இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகளுக்கு போலி முகநூல்களிலிருந்து தவறான பின்னூ}ட்டலிடுதல், ரிசாதின் ஆதரவாளர்கள் எனக் கருதப்படுவோரின் முகநூல் போன்று போலி முகநூல்களை உருவாக்கி ரிசாதின் ஆதரவாளர்களிடத்தில் குழப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம் அமைச்சரொருவருக்கு எதிராக கிளம்பியுள்ள சீடி பிரச்சினையால் அவரின் செல்வாக்கு நலிவடைந்து ரிசாதின் செல்வாக்கு உயர்ந்து வருவதை தடுக்கும் நோக்குடனேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டு மேற்படி பணிகள் ஒதக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேற்சொன்ன குழுவில் உள்ள ஐவருக்கும் கொழுத்த சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது. வெளியாட்கள் எவரும் அவர்களை கண்டு கொள்ளாத வகையில் பிரத்தியேக ஏசி அறை ஒதுக்கப்பட்டு அறையைச் சூழவுள்ள கண்ணாடிகள் கறுப்புத்தாள்களால் மறைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பகரமாக தெரியவருகின்றது.
24 மணிநேரமும் மாறி மாறி இந்தப் பணியை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பணிக்கப்பட்டுள்ளது.
எனவே அ.இ.ம.கா ஆதரவாளர்கள் இந்தக் குழுவின் செயற்பாடு தொடர்பில் மிக அவதானமாகவும் அவர்களின் போலி முகநூல் தொடர்பில் விழிப்பாகவும் இருக்க வேண்டுமென கேட்கப்படுகின்றனர்.