பிரதான செய்திகள்

33வருட கால புலிகளின் போராட்டத்தை தோற்கடித்த மஹிந்த

அரசாங்கம் தேர்தல் நெருங்கும் தருவாயில் தாஜூடீன், லசந்த விக்ரமதுங்க போன்றவர்களின் புதைகுழிகள் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதேபோல் தேர்தல் நெருங்கும் தருவாயில் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய போவதாக பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் தான் இணைந்து கொள்ள உள்ளதாக வெளியாகியுள்ளதாக செய்திகள் தொடர்பாக விளக்க கண்டியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எல்லாளன் 44 ஆண்டுகள் நாட்டை செய்தார். இதன் பின்னர் துட்டகைமுனு மன்னர் எல்லாளனை தோற்கடித்து நாட்டை ஐக்கியப்படுத்தினார்.

அதேபோல் விடுதலைப் புலிகள் 33 ஆண்டுகள் தமிழீழத்திற்காக சண்டையிட்டனர். அதனை மகிந்த ராஜபக்சவே தோற்கடித்தார்.

இதன் மூலம் மகிந்த ராஜபக்ச, துட்டகைமுனு பரம்பரையை சேர்ந்தவர் என்று பொன் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டது.
பொன் எழுத்துக்களால் வரலாறான சம்பவத்தை வரலாற்றில் இருந்தே அழிக்க தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

எமக்கு கிடைக்கும் வாக்குகளை குறைக்கவே இப்படியான பொய் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
எனினும் எப்போதும் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைய போவதில்லை. இதனால், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் பொய் பிரசாரத்தை முற்றிலும் மறுப்பதாக கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி.!

Maash

இணையத்தளங்கள், சமூக வலைத்தள போலிச் செய்தி! அலி சப்ரி நடவடிக்கை

wpengine

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் – கைதான மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Maash