(ஊடகப்பிரிவு)
ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ திட்டத்தின் கீழ் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான முதலாவது படிப்படியாக விபரிக்கும் அகல் விரிவான வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான “ஐரோப்பிய ஒன்றிய GSP+ வணிக வழிகாட்டி” என்ற தலைப்பில் அமைந்துள்ள இந்த வழிகாட்டி கையேடு, ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச வணிக மையமும் [ITC], இலங்கை அரசாங்கமும் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்த வழிகாட்டி கையேட்டை இப்போது இணையத்தளத்தில் பார்வையிடலாம்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அகல் விரிவான கையேடு வெளியிடப்பட்டதை வரவேற்பதாக டிசம்பர் 07 ஆம் திகதி தெரிவித்தார்.
மேலும், இது எங்கள் ஐக்கிய அரசாங்கத்தின் சர்வதேச வணிகம் தொடர்பான வெளிப்படைத் தன்மையான அணுகுமுறையை வெளிக்காட்டுகிறது என்றும், சர்வதேச வணிக மையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை எமக்கு அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சின் உயர்நிலை உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
இந்த கையேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் அண்மையில் 2017 ஜூன் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கையேடு “இலங்கையில் இருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கான மேலெழுந்தவாரியான தொடர்புத் தகவல்களை கொண்டுள்ளதென” கூறியுள்ள போதும், அது அகல் விரிவான கூடுதல் விபரங்களை உள்ளடக்கியதாகத் தெரிகிறது. GSP விதிமுறைகளை உறுப்புரை 9 இல், 27 உடன்படிக்கைளை வரிசைப்படுத்தி ஐக்கிய நாடுகள் / சர்வதேச தொழில் நிறுவனம் (UN/ILO) உடன்படிக்கையிலுள்ள மனித மற்றும் தொழிலாளர் உரிமைகளை உள்ளடக்கிய விடயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளது.
வழிகாட்டி “சட்ட ஆலோசனை மற்றும் எல்லா துறைகளை பற்றிய சோர்வடையச் செய்யும் சகல தகவல்களையும்” வழங்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப நடந்துகொள்வது இலங்கையின் ஏற்றுமதியாளர்களின் பொறுப்பாகுமென அது கூறுகிறது.
ஏற்றுமதியாளர்கள் கைத்தொழில், வர்த்தக அமைச்சிலும் மற்றும் வர்த்தக திணைக்களத்திலும் தம்மைப் பதிவு செய்வது அவசியமாகிறது.
முன்னுரிமையுடைய ஒப்பந்த / திட்டத்தின் கீழ் ஏற்றுமதி செய்ய விரும்பும் ஏற்றுமதியாளர்கள் மூல சான்றிதழ் ஒன்றிற்கு விண்ணப்பித்து, வர்த்தக திணைக்களத்தில் பதிவை மேற்கொள்ளல் வேண்டும்.
பதிவிற்கு தேவையான ஆவணங்களாவன
நிரப்பி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவம் 34, அதனுடன் வணிக, நிறுவன பதிவுச் சான்றிதழ் அதன் பிரதியுடன், வருமான வரி திணைக்களத்தால் கொடுக்கப்பட்ட VAT/TIN பதிவுச்சான்றிதழ், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பதிவுச்சான்றிதழ் [பதிவு செய்யப்பட்டு இருப்பின்] ஏனைய வணிக மேம்பாட்டு நிறுவனங்கள் / கூட்டு இணைப்புகள் / வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் உறுப்புரிமை / பதிவு {உதாரணம்: இலங்கை தேயிலை சபை, வர்த்தக சம்மேளனம் ஆகியவை] மற்றும் உற்பத்தி செயலாக்க விளக்கப் படம் ஏற்புடையவிடத்து. பதிவு செய்வதற்கான ஒரே முறையில் செலுத்த வேண்டிய தொகை இலங்கை ரூபா பத்தாயிரம். வழிகாட்டி GSP+ இன் கீழான ஆடைகள் சம்பந்தமான சட்ட திட்டங்களை விளக்குவதுடன், தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் மற்றும் இலங்கை ஏற்றுமதியாளர்கள் இலகுவாக மேலதிக வளங்களை பெற்றுகொள்ள வழிவகுக்கும் இணையவாசல் [web portals] அத்துடன், அது இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் GSP+ ஐ பெற்றுக் கொள்ள ஆகுசெலவு கூற்று35 அல்லது சத்திய கடதாசி36 , ஆடைக்கான மூலப்பொருள் உற்பத்திகள்37 மற்றும் ஆடை 38ஐ தவிர்ந்த ஏனைய உற்பத்திகளுக்கான மூலப்பொருள் தாள் ஆகியவற்றை உள்ளடக்கிய தேவையானவற்றிக்கான பட்டியல் இடப்படுகிறது.
இந்த கையேடு இப்பொழுது இணையத்தளத்தில் பின்வரும் இடங்களில் கிடைக்கிறது. http://www.intracen.org / EU-SRI-LANKA/Resources-and-materials/ [இணையத்தளத்தின் உடனான நேரடி தொடர்புக்கு http://www.intracen.org/uploadedFiles/intracenorg/Content/Redesig/Projects/EU_SRI-LANKA/GSP%20 Business%20Guide%20English_Final.pdf]
இந்த கையேடு எதுவித கட்டணமும் பதிவிறக்கம் செய்ய முடியும்.