பிரதான செய்திகள்

மன்னாரில் இடம்பெறும் சமுர்த்தி சந்தை! ஐந்து பிரதேச பயனாளிகள் பங்கேற்பு

மன்னார் மாவட்ட சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகளை ஊக்குவிக்கும் கண்காட்சி மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கண்காட்சி இன்று காலை 9 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி உள்ளது.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கண்காட்சி நாளை மாலை வரை நடத்தப்படவுள்ளது.

இதன்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள சமுர்த்திப் பயனாளிகளின் உற்பத்திகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதோடு மலிவு விற்பனையும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளதுடன், மன்னார் பிரதேச செயலாளர் என்.பரமதாசன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், கண்காட்சியில் உள்ளூர் உற்பத்திகளான மரக்கறி வகைகள், பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள், உணவுப்பண்டங்கள் என பல விதமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Related posts

நமது சூழல் மட்டுமல்ல, நமது உள்ளத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுவதும் clean sri lanka வின் ஒரு பகுதியாகும்.

Maash

அமைச்சர் றிஷாட் தலைமையில் முசலியில் கிளை மறுசீரமைப்பு

wpengine

எப்பாவல பொஸ்பேட் தொழிற்சாலையில் தீ

wpengine