இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேர்மனியின் பெர்லினில் போராட்டம் நடத்தப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார், இதற்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் ஜேர்மனியின் தலைநகர் பெர்லினில் அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் கடந்த 8ம் திகதி போராட்டம் நடைபெற்றது.
இதில் சுமார் 1200 பேர் கலந்து கொண்ட நிலையில், இஸ்ரேலின் தேசியக்கொடியை எரித்தனர்.
அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, மற்ற நாட்டுக் கொடியை அவமதித்தது தொடர்பாக 20 பேரை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் உள்துறை அமைச்சர், இஸ்ரேலின் கொடியை எரித்தது அமெரிக்காவின் முடிவுக்கு எதிரான போராட்டமே என தெரிவித்துள்ளார்.
மேலும் உங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதையும், போராட்டம் நடத்துவதையும் அனுமதிக்கிறோம், ஆனால் அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வன்முறை நோக்கத்துடன் முகத்தை மூடிக்கொண்டு பங்குபெற்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று Neukölln நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த போராட்டத்தின் போதும் 2500க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டதுடன் இஸ்ரேல் கொடிகளை எரித்தது குறிப்பிடத்தக்கது.