முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம்(10) இடம்பெற்ற தமிழ் – முஸ்லிம் ஐக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிரசு கட்சியின் முஸ்லிம் ஆதரவாளர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றகட்சி தமிழரசு கட்சி என பெருமையாக கூறுவேன்.
நீண்டகாலமாக இங்கிருந்து அநியாயமாக அகற்றப்பட்ட மக்கள் மீளவும் இங்கு வந்து வாழ்வதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கான ஆர்வத்தினைக் காட்டி இருக்க வேண்டும்.
துரதிர்ஷ்ட வசமாக அவ்வாறான செயற்பாடுகள் அமைந்திருக்கவில்லை. சிறுபான்மையாக சிறு இடங்களில் வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டுகொள்ளாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமான விடயம்.
எமது அரசியல் ஜனநாயக அரசியலாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது, பெரும்பான்மை இன மக்களை சந்தோசமாக வைத்திருப்பதே அரசியல் தலைவர்களின் போக்காக இருக்கின்றது.
ஏனெனில், பெரும்பான்மை மக்களின் வாக்குப் பலத்தில் தங்கியிருக்கின்றோம் என்பதற்காகவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் தான் எண்ணிக்கையில் சிறுபான்மையினமாக இருப்பவர்களுக்கு ஜனநாயகத்தில் நியாயம் கிடைப்பது அரிது. முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும், அநீதிகள், அழுத்தங்கள் எமக்குத் தான் அதிகமாக தெரிந்திருக்க வேண்டும்.
அண்மைக்காலமாக, தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் குறைந்துள்ளதென்பது உண்மை. இடைக்கால அறிக்கை ஏகமனதாக வழிநடத்தல் குழுவினால் செய்யப்பட்டது.
இந்த அறிக்கை இவ்வாறு தான் இருக்க வேண்டுமென அனைத்துக் கட்சிகளும் தீர்மானித்த ஒரு விடயம். அரசியலமைப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் ஏகமனதாக எடுக்கப்பட்டவை.
இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.
அதிலும், பெரும்பான்மையின மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் சட்டமாக இருக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.