பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த கூட்டமைப்பு உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தவிசாளராக இருந்தவர் இன்று ஐக்கிய தேசியக் கட்சியுன் இணைந்து கொண்டுள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் ஐ.தே.கட்சியுடன் இணைந்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசசபை தலைவராக இருந்த மு.பாலசுப்பிரமணியமும், அவருடைய ஆதரவாளர்களுமே இவ்வாறு ஐ.தே.கட்சியுடன் இணைந்து கொண்டனர்.

போரால் பாதிக்கப்பட்ட தமது பிரதேசத்தை முன்னர் தான் தலைவராக இருந்த காலத்தில் அபிவிருத்தி செய்ய முடியவில்லை எனவும், ஐக்கிய தேசியக் கட்சி வவுனியா வடக்கு பிரதேசசபையை கைப்பற்றும் எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

இதில் ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட அமைப்பாளர் கருணாதாச, இணை ஒருங்கிணைப்பாளர் தம்பாபிள்ளை பிறமேந்திர ராஜா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

மொட்டு கட்சியின் முன்னால் மாகாண சபை உறுப்பினர் 10பேர் ஒரு பெண்ணும் கைது

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம்! மு.கா. கட்சியில் குழப்பம்

wpengine