பிரதான செய்திகள்

அரசாங்க அதிகாரிகளின் இடமாற்றம்! ரத்து

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக இடமாற்ற உத்தரவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதனால் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் அமுல்படுத்தப்படவிருந்த அரசாங்க உத்தியோகத்தர்களின் இடமாற்ற உத்தரவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இடமாற்ற உத்தரவுகளை இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்டனவற்றின் இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த இடமாற்ற உத்தரவுகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட வேண்டுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கையெழுத்து வேட்டை இன்று

wpengine

ரணிலிடம் இருந்து கைப்பற்றிய மஹிந்த அணி

wpengine

சமூக ஊடகங்களில் அரசியல் செய்யும் இந்தியாவின் இன்றைய நிலை

wpengine