Breaking
Mon. Nov 25th, 2024
லண்டனில் முஸ்லிம் பெண்ணின் பர்தாவை நீக்கினால்தான் உணவு வழங்கப்படும் என பிரபல McDonalds நிறுவன ஊழியர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

லண்டனின் ஹாலோ வே பகுதியில் Seven Sister’s சாலையில் உள்ள McDonalds உணவகத்துக்கு சென்றிருந்த 19 வயது முஸ்லிம் பெண்ணை இவ்வாறு அவமதித்துள்ளனர். இந்த காட்சிகளை அவருடன் சென்றிருந்த நண்பர் வீடியோ எடுப்பதை பார்த்தும், அதற்கும் தடை கூறியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர் சப்ரினா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், அவர் பர்தாவை நீக்க கூறிய ஊழியரிடம், நான் ஏன் நீக்க வேண்டும்? இது எனக்கு அவமானம் இல்லை. என் மத நம்பிக்கையாக நான் அணிந்துள்ளேன். 19 வருடமாக லண்டனில் வாழ்ந்து வருகிறேன். இதுவரை எங்குமே எனக்கிந்த அவமானம் நிகழவில்லை என கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக வடிக்கையாளர்கள் சிலர் குரலெழுப்பியபோது அவர்களையும் ஊழியர்கள் மிரட்டுவது பதிவாகியுள்ளது.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவரும் நிலையில் குறித்த பெண்ணுக்கு ஆதரவாக அனைவரும் குரலெழுப்பி வருகின்றனர்.

எந்த குற்றமும் செய்திடாத அந்த பெண்ணின் குறித்த நம்பிக்கை மற்றும் அவருடைய தனிப்பட்ட விருப்பத்தை அவமதிக்கும் செயலை செய்துள்ள McDonalds நிறுவனம், குறித்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற முகம் இனவாதத்தை தூண்டும் சம்பவங்கள் எந்த கிளையிலும் நடக்காது என்ற உறுதியை அந்நிறுவனம் வழங்கிட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *