உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சவுதி இளவரசர் 6400 கோடி ஊழல்! திருப்பி செலுத்த நடவடிக்கை

ஊழல் மூலம் சேர்த்த ரூ.6400 கோடி பணத்தை அரசிடம் திருப்பி செலுத்தியுள்ளார் சவுதியின் இளவரசர் ஒருவர். சமீபத்தில் சவுதி அரேபியாவின் இளவரசராகவும், ராணுவ அமைச்சராகவும் பொறுப்பேற்ற முகமது பின் சல்மான், பல அதிரடி நடவடிக்கைகளையும் நிர்வாக சீர்த்திருத்தங்களையும் ஏற்படுத்தினார்.

இவருடைய நடவடிக்கைகளின் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக ஊழல் செய்து பணம் சேர்த்த சுமார் 200 இளவரசர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் ஊழலில் சேர்த்த பணத்தை அரசிடம் திருப்பி ஒப்படைத்தால் மன்னிப்பு வழங்கப்படும் என்று இளவரசர் அறிவித்ததை அடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மிதப் என்ற இளவரசர் தான் சேர்த்த ரூ.6400 கோடியையும் ஏனைய சொத்துக்களையும் அரசிடம் ஒப்படைத்துள்ளார். இதன் பின்னர் இவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts

ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு: எர்டோகன்

wpengine

ஆசிரியர்களும்,அதிபர்களும் அரசியலுக்கு அடிபணிய வேண்டிய தேவையில்லை ஷிப்லி பாரூக்

wpengine

வவுனியாவில் 40 மணித்தியாளங்கள் மின் துண்டிப்பு , மின்சார சபையின் அசமந்தம்..!

Maash