பிரதான செய்திகள்

மன்னார்,மடுவில் உருக்குலைந்த நிலையில் சடலம்.

மன்னார் மடு பூமலர்ந்தான் நான்காம் கட்டை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணைகளுக்காக சடலம் குறித்த பகுதியிலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இதுவரை அடையாளங் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அடம்பன் ஆண்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபர் கடந்த 25 ஆம் திகதி முதற் காணாமற் போயுள்ளார்.

இது குறித்து கடந்த 27 ஆம் திகதி அடம்பன் பொலிஸ் நிலையத்தில் குறித்த நபரின் மனைவியால் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

சடலமொன்று மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமற்போன நபரின் சடலமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

Related posts

தாமதமாகும் சுயாதீன ஆணைக்குழுக்களின் உறுப்பினர் நியமனம்!

Editor

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி சஜித்துக்கு வழங்கப்பட வேண்டும்

wpengine

அமைச்சரவை மாற்றத்துக்கு ஐ.தே.க. பின்வரிசை எம்.பிக்கள் ரணிலிடம் முறையீடு

wpengine