பிரதான செய்திகள்

தகாத வார்த்தைகளால் மோதிக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்

அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் கடுமையாக வாதப் பிரதிவாதம் இடம்பெற்றுள்ளது.

பொன்சேகா மற்றும் காமினி லொகுகே வாய்த்தர்க்கம் காரணமாக நேற்றைய தினம்(30) சில மணி நேரங்கள் நாடாளுமன்ற அமர்வில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டிருந்தது.

வரவு செலவுத்திட்டத்தின் கீழ் பெருநகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கான நிதியொதுக்கீடு தொடர்பான விவாதத்தில் இருவரும் தகாத வார்த்தைகளால், ஒருவரையொருவர் திட்டிக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த வார்த்தைகளை ஹன்சாட் பதிவில் இருந்து நீக்கிவிட சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

அநுர அரசிடம் மைத்திரி விடுத்துள்ள கோரிக்கை…!

Maash

மங்களவுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை ஆப்பு

wpengine

அத்தியாவசிய உலர் உணவுக்காக மாதாந்த சம்பளம் ஒதுக்கீடு

wpengine