Breaking
Thu. Nov 21st, 2024

பொஸ்னியா இராணுவத்தின் முன்னாள் தளபதியான ஸ்லோபோதன் ப்ரால்ஜக், சர்வதேச நீதிமன்றில் நீதிபதி கண் முன்னரே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த 1992 – 1995 ஆண்டுகளில் நடந்த பொஸ்னியா போரின் போது குறிப்பிட்ட இனத்தவர்கள் போர் நெறிமுறைகளை மீறி படுகொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை விசாரித்த சர்வதேச குற்ற தீர்ப்பாயம் பொஸ்னிய இராணுவத்தின் தளபதியாக செயற்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் உள்பட 6 பேரை போர்க் குற்றவாளிகள் என அறிவித்தது.

இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் நெதர்லாந்து, ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அப்பீல் செய்யப்பட்டது.
இந்த விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று மன்றில் ஆஜரான ஸ்லோபோதன் ப்ரால்ஜக் நீதிபதி கண்முன்னே குப்பியில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு, நான் குற்றமற்றவன் என்றும் தான் விஷம் குடித்துள்ளதாகவும் நீதிபதியிடம் கூறினார்.

இதனையடுத்து, மருத்துவர்களை வரச்சொல்லி விட்டு நீதிமன்றம் ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்லோபோதன் ப்ரால்ஜக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக ஹேக் நகர பொலிசார் கூறியுள்ளனர்..

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *