பிரதான செய்திகள்

ரணில்,சம்பந்தன் எப்படி ஆட்சி அமைப்பார்கள்! ஆவலாக இருக்கின்றேன் மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து எப்படி ஆட்சியமைப்பார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றிடம் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எப்படிக் காப்பாற்றுவது என்பதும் எங்களுக்கும் தெரியும் எனவும் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைக்குமா என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றும் அதுதான் எனக்குத் தேவை எனவும் கூறியுள்ளார்.

இதேவேளை, செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்போது திருட்டுமுழி முழித்துக்கொண்டிருக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Related posts

நாமல் எதாவது பிரச்சினையா? மைத்திரி கேள்வி!

wpengine

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நால்வர் தப்பியோட்டம்

Maash

Good Vibes Bot ஊடாக $5 Viber Out credit களை மாதமும் வெற்றியீட்ட முடியும்.

wpengine