மன்னார் மாவட்டத்தில் முசலி கோட்டத்தில் வெள்ளிமலை கிராமத்தில் அமைந்துள்ள மன்/ பதியுதீன் பாடசாலைக்கான சுற்றுவேலி அமைக்கும் வேலைகளை தடைசெய்யும் நோக்குடன் அரிப்பு கிராமத்தில் உள்ள மதத்தலைவர் ஒருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடாக சில தடைகளை மேற்கொண்டு வருகின்றார்.என கிராம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமையும் இன்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடாக உயர் அரச அதிகாரிகளை தொடர்பு கொண்டு பதியுதீன் பாடசாலைக்கான சுற்றுவேலி அமைக்கும் வேலைகளை தடைசெய்யும் நோக்குடன் பாரிய திட்டங்களையும்,சூழ்ச்சிகளையும் கொண்டு வருகின்றார் என்றும் வெள்ளிமலை முஸ்லிம் குடியேற்றத்தை தடுக்கும் நோக்குடன் முசலி பிரதேச செயலகத்தின் முன்னால் செயலாளர் ஊடாகவும் சில நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார்கள் என அறியமுடிகின்றது.
இந்த அரிப்பு கிராமத்தின் மதகுருவின் நடவடிக்கையினை பார்க்கின்ற போது மீண்டும் ஒரு முறை வடக்கு முஸ்லிம்கள் அகதியாக செல்ல வேண்டிய நிலைக்கு ஏற்பட்டு விடுமோ என்ற நிலைக்கு வெள்ளிமலை மக்கள் அஞ்சுகின்றார்கள்.