Breaking
Sat. Nov 23rd, 2024

காலி – கிந்தொட்ட பகுதியில் முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்தும், அதற்கு நீதியான விசாரணையை கோரியும் வட மாகாணசபையில் முன்மொழியப்பட்ட விசேட கண்டனப் பிரேரணை அடுத்த அமர்விற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாணசபையின் 110ஆவது அமர்வு இன்று யாழ். கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில்அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அமர்வில் கிந்தொட்ட உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முஸ்லிம் மக்கள் மீது அண்மையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களை கண்டிக்கும் விசேட பிரேரணை ஒன்றை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவையில் முன்மொழிந்துள்ளார்.

இந்த வேளையில் வவுனியாவில் இடம்பெற்ற சம்பவம் திட்மிட்ட ரீதியில் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. எனவே அதை தவிர்த்து விட்டு இந்த பிரேரணையை நிறைவேற்றுமாறு வவுனியா மாவட்ட உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இவ்வாறானபிரேரணைகள் மேலும் வன்முறைகளை தூண்டும் விதமாக அமைந்துவிடும் என்ற ரீதியில் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராச உள்ளிட்ட ஏனைய சில உறுப்பினர்களும் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பில் அவசர முடிவுகள் எடுக்காமல் அடுத்த அமர்விற்கு இந்த பிரேரணையை ஒத்திவைக்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வழங்கிய ஆலோசனைக்கமைவாக அடுத்த அமர்விற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *