Breaking
Sat. Nov 23rd, 2024

மூன்று மாவட்டங்களுக்கான அரச அதிபர் நியமனக்கடிதங்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவினால் குறித்த நியமனக்கடிதங்கள் இன்று மாலை அமைச்சரின் அலுவலகத்திலிருந்து வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு, வவுனியா, நுவரேலியா ஆகிய மாவட்டங்களுக்கான அரச அதிபர் நியமனம் இன்றுடன் நிறைவுக்கு வந்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நீண்ட நாள் அரச அதிபர் வெற்றிடம் இன்றிலிருந்து பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக மா.உதயகுமார், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய சோமரட்ன அவர்களும்,

நுவரேலியாவிற்கான புதிய மாவட்ட அரசாங்க அதிபராக வவுனியாவில் கடமையாற்றிய அரசாங்க அதிபர் புஷ்பகுமார அவர்களும் இன்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தனவிடமிருந்து நியமனக்கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

மட்டக்களப்பிற்கு புதிதாக அரச அதிபராக நியமனம் பெற்ற மா.உதயகுமார் முன்னர் கிழக்கு மாகாணத்தின் உள்ளுர் உதவி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராகவும், பின்னர் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டுமான சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக தனது கடமைகளை பெறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *