பிரதான செய்திகள்

வவுனியாவில் ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள்

வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் 2013 – 2016 ஆண்டிற்கான இணைப்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் வவுனியா குடியிருப்பு பூங்காவில் நேற்றைய தினம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் பட்டதாரிகளுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டு பல மாதங்கள் கடந்தும் இதுவரை நியமனம் தொடர்பான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலிற்கான அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில் தேர்தலிற்கு முன் எமக்கான நியமனங்களை வழங்குதல் வேண்டும்.

எனவே எதிர்வரும் (15.11) புதன்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு யாழ். மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்வதாக வட மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் நிர்வாக தலைமைகள் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு முழு ஆதரவு வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டது.

அந்த வகையில், வவுனியாவின் அனைத்து வேலையற்ற பட்டதாரிகளும் (15-11) அன்று காலை 6.30 மணிக்கு வவுனியா அரச பேருந்து நிலையத்தில் ஒன்றுகூடுமாறு வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Related posts

வரலாற்றுச் சிறப்பு மிக்க தேசிய நல்லிணக்கக் கொள்கைக்கான அமைச்சரவை அங்கீகாரம் முன்னாள் ஜானதிபதி சந்திரிக்கா

wpengine

மட்டக்களப்பில் கிராமசேவகர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதற்கு எதிராக போராட்டம்!

Editor

முஸ்லிம் சமூகம் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றது மீராசாஹீப் வாழ்த்து செய்தி

wpengine