பிரதான செய்திகள்

வவுனியாவில் வாழும் விசித்திரமான சமூகம்! புதுவகையான திருமணம்

வவுனியா கிராமம் ஒன்றில் தெலுங்கு முறையில் வித்தியாசமான திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது.
மல்காந்தி என்ற 19 பெண்ணுக்கும் அரவித்த குமார என்ற 20 வயதுடையவருக்கும் தெலுங்கு சம்பிரதாய முறைப்படி இந்த திருமணம் நடைப்பெற்றுள்ளது.

பெரியோர்கள் முன்னிலையில் ரபான் அடித்து, பாசி மாலை அணிந்து, மோதிரம் மாற்றி திருமண பந்தத்தில் குறித்த இருவரும் இணைந்துள்ளனர்.

வவுனியா, தெற்கு பிரதேச செயலகத்தின் நொச்சிகுளம் கிராமத்தில் வித்தியாசமான வாழ்க்கை முறையை கொண்ட சமூகம் ஒன்று வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சமூகத்தில் சுமார் 54 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

குரங்கு வித்தை காட்டுதல், பாம்பு வித்தை காட்டுதல் போன்றவை இவர்களின் சம்பிரதாய தொழிலாகும். தற்போது இவர்கள், பயிர்ச் செய்கையில் ஈடுபடுதல், மீன் பிடித்தல் அல்லது பொருட்கள் விற்பனை செய்யும் தொழில்களில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த திருமணத்தின் பின்னர் மணமகளின் தந்தையினால் இருவருக்கும் பாம்பு மற்றும் பாம்பு பெட்டி ஒன்று சீதனமாக வழங்கப்படுகின்றது. இதன் ஊடாக வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

Related posts

வவுனியாவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படாத குடி நீர் திட்டம்

wpengine

ஓட்டமாவடிக் கோட்டத்தில் அரசியல் மயப்பட்டுப்போன கல்வியற்கல்லூரி ஆசிரியர் நியமனம்

wpengine

வர்த்தகமானி அறிவித்தல் வெளிவந்தால் 19ஆம் திகதி தேர்தல் மஹிந்த

wpengine