பிரதான செய்திகள்

“முரண்பாட்டு சமன்பாடு” கவிதை தொகுப்பு வெளியீடு

பரீட்சனின் “முரண்பாட்டு சமன்பாடுகள்” கவிதைப்பிரதி வெளியீட்டு அறிமுகமும் பிரதிமீதான வாசிப்பு அனுபவப்பகிர்வும் அகர ஆயுதம் அமைப்பின் ஏற்பாட்டில் DMK Associat நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நிந்தவூர் பொது நூலகத்தில் மிகவும் சிறப்பாக புத்தங்களுக்கு மத்தியில் இடம்பெற்றது.

கலாபூஷணம் பாவேந்தல் பாலமுனை பாரூக் அவர்களின் தலைமையில் நடந்த இன்நிகழ்வுக்கு கெளரவ அதிதியாக எழுத்தாளருமான, அரசியல் சமூக சிந்தனை செயற்பாட்டாளருமான அஷ்சேக் முபாரக் அப்துல் மஜீத் கலந்து சிறப்பித்ததோடு கெளரவ பிரதியையும் பெற்றுக்கொண்டார்..

கவிதைப்பிரதியை அகர ஆயுதத்தின் தலைவரும் கவிஞருமான இலக்கியன் முர்சித் வெளியிட்டு வைக்க பிரதிமீதான வாசிப்பு அனுபவப்பதிவை ஆய்வாளரும் எழுத்தாளருமான அப்துல் ரசாக், ஆய்வாளர் மர்லீன், ஆய்வாளரும் எழுத்தாளருமான இமாம் அத்னான் ஆகியோர் நிகழ்த்தினர்.

கனதியான இலக்கிய ஆளுமைகளின் பிரசன்னத்துடன் நடந்த இன்நிகழ்வு குறுகிய நேரத்தில் நிறைவான இலக்கிய மணமும் சுவையும் நிறைந்ததாக நடாத்தி முடிந்தமை சிறப்பபிற்கும் பாராட்டிற்கும் உரியதாகும்.

Related posts

ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை மக்களுக்கு உடனடியான உதவிகளை வழங்க தயார்

wpengine

ஹஜ் விவகாரம் : கடவுச் சீட்டு ஒப்படைக்கும் இறுதித் தினம் இன்று

wpengine

கொழும்பு, வில்பத்து, காத்தான்குடி பகுதி ஊடாக ISIS பயங்கரவாதிகள் -பொதுபல சேன

wpengine