Breaking
Mon. Nov 25th, 2024

வில்பத்து சரணாலயத்தின் வடக்குப் பகுதியில் இடம்பெறும் காடழிப்பு மற்றும் வீடமைப்புத் திட்டத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பான விவாதம் அடுத்த வருடம் பெப்ரவரி 8ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த மனு நீதிமன்றின் முன்னிலையில் நேற்றுமுன் தினம்(10) எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் நீதிக்கான நிலையத்தால் தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில், மத்திய சுகாதார அதிகார சபையின் காப்பாளர் நாயகம், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், காணிகள் ஆணையாளர் நாயகம், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், மன்னார் மாவட்ட செயலாளர், கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வனத்தைக் காப்பதற்கான நடவடிக்கை எடுக்கக் கோரியும், மீள் மரநடுகைக்கு உத்தரவிடக் கோரியுமே மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *