Breaking
Fri. Nov 22nd, 2024

(ஏ. எச். எம். பூமுதீன்)

“சாய்ந்தமருது தனியாக பிரிந்து செல்கின்றபோது முஸ்லிம்களின் விகிதாசாரம் குறைந்து தமிழ் மக்களுக்கு பேரம்பேசும் வாய்ப்பு ஏற்படுவதோடு தமிழ் மக்களின் ஒருமித்த வாக்குப் பலத்தினால் கல்முனை மாநகர முதல்வராகவும் வரமுடியும். இதனால் கல்முனை தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தியாகி விமோசனம் பெறுவார்கள் என்பதற்காகவே கல்முனையை 4ஆக பிரிக்க கோருகின்றனர்.

கல்முனை நகரில் முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் இல்லை .ஆனால் அவர்களின் வர்த்தக நிலையங்கள் மாத்திரம் உள்ளது என்பதற்காக தமிழர்களின் பிரதேசத்தை முஸ்லிம்களின் பிரதேசமாக உரிமைகோர விளைகின்றனர். இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.”

இவ்வாறு தெரிவித்திருப்பவர் வடமாகாண அமைச்சர் – முஸ்லிம்களை அழித்தொழித்த புலிகளின் தளபதிகளில் ஒருவரான எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் ஆகும் .

சாய்ந்தமருது முஸ்லீம் சமூகமே இப்போது புரிகின்றதா? சாய்ந்தமருதை மட்டும் தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோசத்தின் பின்னணியில் உள்ள சதி திட்டம்.

இதனை நாம் ஆரம்பத்தில் கூறி இருந்தால் , தமிழ்- முஸ்லீம் உறவை பிரிக்க முயட்சிக்கிறார்கள் என்று பெரும் பிரளயத்தேயே உண்டு பண்ணியிருப்பீர்கள். ஆனால், அல்லாஹ்- தமிழ் சமூகத்தின் தலைவர்களை கொண்டே உண்மையை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளான்.

சாய்ந்தமருது இளைஞ்சர் சமூகமே! கொஞ்சம் நிதானமாக இனியாவது சிந்தியுங்கள்.

கல்முனை நகர மத்தி அன்று பாசிச புலிகளால் அழிக்க முயற்சிக்கப்பட்டபோதும் – பொதுபலசேனா கூட்டம் நடத்தி நகரை அழிக்க முட்பட்டபோதும் நீங்களும் சேர்ந்தல்லவா அவைகளை தடுத்து நிறுத்தி நகரத்துக்கு பாதுகாப்பு வழங்கி காப்பாற்றினீர்கள்.

இப்போது, மேற்சொன்னவற்றின் – கல்முனை நகரை அழிக்கும் திட்டத்தின் மறுவடிவம்தான் ” சாய்ந்தமருதை மட்டும் தனியாக பிரிக்கும் கோசம்.”

கல்முனை எம்பி கோடீஸ்வரன்- இனவாதத்தின் உச்சம் தொட்ட மனிதர்.
வடமாகாண அமைச்சர் அனந்தி – முஸ்லிம்களை அழித்த புலித் தலைவர் ஒருவரின் மனைவி. இப்பிடிப்பட்டவர்கள் அறிக்கைகள் விடும்வரைக்குமா நமக்கு சுய சிந்தனை இல்லாமல் போய் விட்டது.?

சாய்ந்தமருது மட்டும் பிரிபட்டால் கல்முனை நகரில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்கள் கொள்ளை அடிக்கப்படும், எரிக்கப்படும்- ஜும்மா பள்ளிவாசலுக்கு கல் எறியப்படும் அல்லது பள்ளிக்கு அருகில் கோவில் கட்டப்படும் . பொதுச் சந்தை எம்மை விட்டு தூரமாகும். இதுபோல இன்னும் பலதும் நடக்கும். இவ்வாறு நடக்கும்போது நீங்கள் வாய்பொத்தியா இருப்பீர்கள். உங்களை அறியாமலே பொங்கி எழுவீர்கள். அது பின்னர், இனவாதமாக வெடித்து இரத்த ஆறு ஓட வழிசமைக்கும். இது தேவையா நமக்கு?

இவ்வாறெல்லாம் நடக்கும் என்று தெரிந்துதான் சாய்ந்தமருத்துக்கு மட்டும்
என உள்ளுராட்சி மன்றம் வழங்க வேண்டாம் என்று கோஷமிட்டோர்- தடுத்தனர். ஆனால், உங்களுக்கும்- முழு கல்முனை தொகுதிக்கும் நன்மை செய்ய முயன்றோரை ” துரோகி” என்று பட்டம் வழங்கி அவமானப்படுத்துனீர்கள்.

கல்முனை நகரை அன்று புலிகள் எரித்து சாம்பலாக்க முனைந்தபோது அதனை தடுக்க கல்முனை மக்களுக்கு தலைமை தாங்கிய தற்போதைய பிரதியமைச்சர் ஹரீஸை ” அன்று கல்முனையின் காவலன் என்று கொண்டாடிய நீங்கள், இன்று அதே வாயினால் அவரை துரோகி” என்கிறீர்கள். இது என்ன நியாயம்?

பிரதியமைச்சர் ஹரீஸ் அங்கம் வகிக்கும் கட்சியின் தலைவர்- சம்பந்தனுடன் ஒட்டி உறவாடி வடக்கையும் கிழக்கையும் இணைக்க முயற்சிப்பதற்கு – கரையோர மாவட்டத்தை சிபாரிசு மனுவில் சேர்க்காமல் விட்டதற்கு- கல்முனை நகரை தாரை வார்த்து கொடுக்க மறைமுகமாக சூழ்ச்சி செய்வதற்கு உங்கள் ஹரீஸ் எம்பியை துரோகி என்பது மகா முட்டாள்தனம் என்பதை கொஞ்சம் நிதானமாக இருந்து சிந்தித்தால் புரியும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *