பிரதான செய்திகள்

வவுனியா சமூக சேவைகள் பிரிவினால் விழிப்புணர்வு வேலைத்திட்டம்

வவுனியாவில் குடும்ப உறுப்பினர்களுக்கு மூத்தோர் விழுமியப் பண்பு பற்றிய அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டம் வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தால் முன்னெடுக்கப்பட்டது.

ஈச்சங்குளம் கிராம சேவையாளர் அன்ரனிதாஸ் தலைமையில் நேற்று  காலை 11.00 மணியளவில் மறவன்குளம் பலநோக்கு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் ‘முதியோர் பற்றிய விழுமியப்பண்புகளை வீட்டில் இருந்து ஆரம்பித்தல்’ என்ற தொனிப்பொருளில் கருத்துரை வழங்கினார்.

 

மறவன்குளம் கிராம அபிவிருத்திச்சங்கப் பொருளாளர் யூட் அமல்ராஜ் முதியோர் சங்கப் பிரதிநிதிகள் , கிராம அபிவிருத்திச் சங்கப்பிரதிநிதிகள் , பொதுமக்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வில் மறவன்குளம் அ.த.க.பாடசாலையில் கல்விபயின்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த செல்வி எஸ்.டக்ஸிகாவிற்கு கொக்குவிலைச் சேர்ந்த கனடாவாழ் நலன்விரும்பி செல்லத்துரை குகதாஸ் துவிச்சக்கர வண்டி வழங்கி கௌரவித்தார்.

Related posts

இரண்டு நீதிபதிகள் பதவிப் பிரமாணம்!

Editor

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை !

Editor

மீள் எழுர்ச்சி திட்ட முசலி சந்தையின் அவல நிலை! கவனம் செலுத்துமா? முசலி பிரதேச சபை (படங்கள்)

wpengine