Breaking
Sun. Nov 24th, 2024

 (அபூ அலதாபி)
அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் கிராம அதிகாரிகள் தட்டுப்பாடு மிக மோசமாக நிலவுகின்றது. இருக்கவேண்டிய கிராம அதிகாரிகளின் எண்ணிக்கை 28. இருப்போர் எண்ணிக்கை 15இவ்வாறான நிலையில் அனுபவமும் தேர்ச்சியும் நிறைந்த சிலகிராம அதிகாரிகளுக்கு மேலதிகமாக ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவு வழங்கப்பட்டது.

வேலைப்பழுவுக்கு மத்தியில் இவர்களின் சேவை எவ்வித தொய்வும் இன்றி சிறப்பாக நடைபெற்றது.இதற்கு சான்றாக பிரதேச மக்கள் உள்ளனர்.

இந்நடைமுறை முந்நாள் பிரதேச செயலாளர்களின் காலத்திலும் நடைபெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது. அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு தரமான சுப்ரா தரம்பெற்ற தமிழ் சமுகததைச் சொந்த திருமதி சரோஜா நியமிக்கப்பட்டார். அவருக்கு கடமை வழங்கப்படாமல் தாபன விதிக்கோவையை மீறி வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதேச செயலாளரின் கூஜாவைத் தூக்காமல் நியாயம கேட்கும் அதிகாரிகளை அதிகார பலத்தைப் பயன்படுத்தி இடமாற்ற அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.

அவை கீழே

1. உதவித்திட்டமிடல் அதிகாரியின் இடமாற்றம் (திரு. தமீம்)

2. 60 வயது வரை சேவை புரிய உரிமை இருந்தும் முன்கூட்டியே விருப்பின்றி சில கிராம சேவகர்கள் ஓய்வு பெற்றமை (திரு. முனவ்வர், திரு. மீராலெவ்வை, திரு. தூஹீர்)

3. ஒரு பெண் உத்தியோகத்தர் இடமாற்ற அச்சுறுத்தலால் முன்கூட்டி ஓய்வு பெற்றமை. (திருமதி. சனூபா)

4. நியாயத்திற்காகப் போராடும் 4 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இடமாற்ற முயன்றமைஃ (திரு. சறூக், திரு. குர்சித், திரு. அன்வர் சதாத், திரு. கபீர்)

5. சபையிலே தைரியமாக மக்களுக்கு நடைபெறும் அநீதிகளையும் ஊழல்களையும் தட்டிக் கேட்கிறார் என்பதற்காக அ. அஹமட் நஜீப் என்பவரை அட்டாளைச் சேனைக்கு இடமாற்றியமை (56 வயதுடைய தற்போதைய சேவை நிலையத்தில் 3 வருட சேவை உள்ள இவரை எவ்வாறு இடமாற்றலாம், இது ஒரு தாபன விதிக்கோவை மீறல் ஆகும்.)

பிரதேச செயலாளருக்கும் இவருக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு பழிவாங்குமுகமாக மாவட்டச் செயலாளருடாக இடமாற்றம் வழங்கியுள்ளார். நேர்மையான நல்லுள்ளம் கொண்ட மாவட்டச்செயலாளர் ஏன் நியாயத்திலிருந்து தவறியுள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது.

ஆலிம்நகர் மக்களும், அக்கரைப்பற்று 17 மக்களும் (இரு கிராம உத்தியோகத்தர் பிரிவும்) எமது கிராம உத்தியோகத்தர் அ.அ.நஜீப் அவர்கள்தான் தொடர்ந்தும் சேவை புரிய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர்.

ஒரு அரசியல் கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் பிரதேச செயலாளர் மாற்றுக் கட்சிகளைச்சார் குடும்பங்களைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர்களையும், ஏனைய உத்தியோகத்தர்களையும் மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி அதிமேதகு ஜனாதிபதி, மேதகு பிரதமர்; கௌரவ அமைச்சர்கள் போன்றோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *