உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜப்பான்,தென் கொரியா, சீனா, வியட்னாம், பிலிபைன்ஸ் செல்லவுள்ள ட்ரம்ப்

ஆசியாவிற்கான நீண்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று முதல் நாளாக ஹவாய் தீவிற்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து ட்ரம்ப் அடுத்ததாக ஜப்பானின், தென்கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்லவுள்ளார்.

அமெரிக்கா மற்றும் வடகொரிய விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், டொனால்ட் ட்ரம்பின் ஆசிய விஜயம் அமைந்துள்ளது.

ஹவாய் தீவிற்கு சென்றுள்ள ட்ரம்ப், அங்குள்ள இரண்டாவது உலக யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட யூ.எஸ்.எஸ் எதிசோனா கப்பலை பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணடாவது உலக போர் காலப்பகுதியில் ஜப்பானால் அமெரிக்கவின் பெர்ல் துறைமுத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு அமைய அமெரிக்கா, 1941ஆம் ஆண்டு உலக போருடன் நேரடியாக தொடர்புபட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னார் நகர பிரதேச செயலக காணி பிரிவு உத்தியோகத்தர்கள் மீது மக்கள் விசனம்

wpengine

பிள்ளையானின் வழக்கானது, சட்டத்தரணி உதய கம்மன்பில பேசும் முதல் வழக்காக இருக்கும். – டில்வின்

Maash

சமையல் எரிவாயுடன் சம்பந்தப்பட்ட 458க்கும் அதிகமான வெடிப்புச் சம்பவங்கள்-சஜித்

wpengine