பிரதான செய்திகள்

தாக்கப்பட்ட சாய்ந்தமருது! பாதுகாப்பு கடமையில் பொலிஸ்

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான சாய்ந்தமருது பகுதிக்கான பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை இனந்தெரியாதநபர்களினால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனைக்குடி, சாய்ந்தமருது எல்லைப் பகுதியான சாஹிரா வீதிக்கு முன்பாகவுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இருந்த பெயர்ப்பலகை இன்று அதிகாலை சேதம் விளைவிக்கப்பட்டதாக 119 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக அழைப்பு வந்தது.

இதனையடுத்து இரவுநேர கடமையிலிருந்த உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

அதன் பிரகாரம் விசாரணை நடைபெறுகின்றது. சந்தேகத்தின் பேரில் எவரும் கைது செய்யப்படவில்லை.

அப்பிரதேசத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என கல்முனை தலைமைக் காரியாலயத்தின் பொலிஸ் பொறுப்பாளர் தெரிவித்தார்.

Related posts

சீருடை வவுச்சர் காலம் நீடிப்பு

wpengine

அமைச்சரவை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்! யாழ் அதிபர்

wpengine

உரும்பிராய் யோகபுரம் அறநெறிப் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் வைபவம்-சித்தார்த்தன்

wpengine