2018 ஆம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவிலுள்ள விளையாட்டு அரங்குகளில் பெண்கள் பார்வையாளர்களாக அமர அந்நாட்டு அரசாங்கம் முதன்முறையாக அனுமதி வழங்கியுள்ளது.
விளையாட்டு நிகழ்வுகளைக் கண்டுகளிப்பதற்காக ரீயாட், ஜெட்டா மற்றும் டமாம் ஆகிய நகரங்களிலுள்ள அரங்குகளினுள் பெண்கள் தங்கள் குடும்பத்தவர்களுடன் வருதை தரமுடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சவுதியிலுள்ள பெண்கள் வாகனங்கள் செலுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்த நடைமுறையும் அமுலுக்கு வரவுள்ளது.
சவுதி மன்னர் முஹமட் பின் சல்மான் பொருளாதாரத்தை உயர்த்தவும், சவுதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் செயற்பட்டுக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.