இரண்டு நாள் அரச முறை பயணம் மேற்கொண்டு கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த பயணத்தில் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.
டோஹாவில் உள்ள விடுதி ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியுள்ளார்.
இதன்போது ஜனாதிபதி கட்டாரில் உள்ள இலங்கையர்களை சந்தித்ததுடன் அவர்களுடன் கலந்துரையாடியிருந்தார்.
ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து கட்டாரில் உள்ள இலங்கையர்கள் மகிழ்ச்சி வெளியிட்டதுடன், தமது வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
சர்வதேசத்தின் மத்தியிலும், இலங்கை மக்களுக்கு மத்தியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எளிமையான ஒருவர் என்ற கருத்து காணப்படுகின்றது.
எவ்வளவு பெரிய ஒருவராக இருந்தாலும், சிறிவராக இருந்தாலும், அனைவருடனும் சரிசமனாக பேசும் சுபாவம் கொண்டவர் மைத்திரி.
அந்த வகையில் கட்டார் சென்றுள்ள ஜனாதிபதி தன்னுடன் வந்த ஏனைய மக்கள் பிரதிநிதிகளுடன், வெளியில் அமர்ந்து சாதாரண ஒரு மனிதரைப்போன்று பேசி சிரிப்பது போன்ற புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இதன்போது, ரவூவ் ஹக்கீம், முஜிபுர் ரஹ்மான், அசாத் சாலி, அஜித் பீ பெரேரா, றிஷாட் பைசர் முஸ்தபா ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஒரு கட்டடத்திற்கு வெளியில் அமர்ந்து சாதாரணமாக பேசியுள்ளார்கள்.
ஒரு நாட்டின் ஜனாதிபதியானவர் வெளிநாட்டு பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் போது, இவ்வாறு ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்தியில் அமர்ந்து பேசியிருப்பதானது அவருடைய எளிமையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.