பிரதான செய்திகள்

அமைச்சுக்கான நிதியினை செலவு செய்யாத அமைச்சர்கள்

அமைச்சுக்களுக்காக இந்த ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 50 வீதம் கூட செலவிடப்படவில்லை என அரசாங்க நிதி செயற்குழுவின் உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டுக்காக நிதி அமைச்சினால், அமைச்சுக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி பயன்பாடு 50 வீத செயற்திறனைக் கூட பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சுக்களின் செயற்திறனின்மை குறித்து ஆராயப்பட உள்ளதாகவும், எதிர்வரும் இரண்டு மாதங்களில் இந்த அமைச்சுக்கள் எவ்வாறு நிதியை பயன்படுத்தும் என்பது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டில், அரசாங்கத்தின் நிதிச் செயற்பாடுகள் குறித்து இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை ஊடக சந்திப்பு மூலம் தெளிவுபடுத்தத் தீர்மானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட வரியை அறவீடு செய்ய உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் நவவி (பா.உ.) இராஜினாமா

wpengine

காணி விடயத்தில் அரசு கவனம் செலுத்தும் சல்மானுக்கு ரணில் பதில்

wpengine

பட்டிக்காட்டான்

wpengine