பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட அரசியவாதிகளே! அப்பாவி தொழிலாளிகளின் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

வவுனியா பேருந்து நிலையக் கடைத் தொகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தமையால் வர்த்தகர்கள் தமது பொருட்களை பாதுகாக்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 

வவுனியாவில் நேற்று  (24) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக பேருந்து நிலைய கடைத்தொகுதிக்குள் மழை நீர் உட்புகுந்துள்ளது. பேருந்து நிலைய மாடிக்கட்டடத் தொகுதி ஒன்று சேதமடைந்துள்ளது. அதனூடாக மழை நீர் வர்த்தக நிலையங்களுக்குள் நேரடியாகப் புகுந்துள்ளது.

 

கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் வர்த்தகர்கள் வியாபாரம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தமது பொருட்களைப் பாதுகாக்க வேறு இடத்தை தேட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டடத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கடைக்கும் மாதாந்த வாடகையாக ரூ.3,200 அறவிடப்பட்டபோதும், போதுமான பாதுகாப்பு மற்றும் வசதிகள் எதுவும் செய்து தரப்படுவதில்லை என்று வர்த்தகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related posts

2022ல் திருத்தப்பட்ட முஸ்லிம் விவாக ,விவாகரத்துச்சட்டம் குறைகளுடன், சட்டத்தை மாற்ற அரசு ஆலோசனை.

Maash

மட்டக்களப்பு கெம்பஸில் மருத்துவ பீடம் அமைப்பதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை

wpengine

சாரதிகளுக்கான விசேட அறிவிப்பு!

Editor