கடந்த சனிக்­கி­ழமை பிறந்த இந்த அபூர்வ இரட்டைக் குழந்­தைகள் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செய்­தி­களை வெளி­யி­ட்­டிருந்தன.

அதே­ச­மயம்  மேற்­படி குழந்­தைகள் காலொன்றை தம்­மி­டையே பங்­கீடு செய்­துள்­ளன. இந்­நி­லையில் இந்த இரட்டைக் குழந்­தை­களின்  சிக்­க­லான உடல் நிலை கார­ண­மாக அந்தக் குழந்­தை­களை வேறாகப் பிரிப்­ப­தற்கு  காஸாவில் போதிய மருத்­துவ வச­தியோ, மருத்­துவத் தொழில்­நுட்­பமோ இல்­லா­ததால் அந்தக் குழந்­தை­களை  அமெ­ரிக்கா, சவூதி அரே­பியா அல்­லது இஸ்­ரே­லுக்கு அனுப்பி  சிகிச்­சை­ய­ளிக்கத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

இந்தக் குழந்­தைகள் முக்­கிய உடல் உறுப்­பு­களை தம்­மி­டையே பங்­கீடு செய்­யா­ததால் அவற்றின் உடல் நலம் ஸ்திரத்­தன்­மையில் உள்­ள­தாக  காஸா­வி­லுள்ள ஷிபா மருத்­து­வ­ம­னையை சேர்ந்த மருத்­துவ கலா­நிதி அபு ஹம்டா  தெரி­வித்தார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் காஸாவில்  உடல் ஒட்­டிய நிலையில் பிறந்த இரட்டைக் குழந்­தைகள் மர­ணத்தைத் தழு­வி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.