Breaking
Mon. Nov 25th, 2024

சென்னையில் நீல திமிங்கிலம் விளையாடிய பொறியியலாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த நபர் எழுதிய கடிதமொன்று காவற்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்காரணமாக , இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்த்தியுள்ளது.

சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அலமாதி சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு.
அப்பகுதியில் டீ கடை நடத்தி வரும் இவருக்கு, தினேஷ் (வயது 26) என்ற மகன் உள்ளார்.

அவர் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். மும்பையில் உள்ள ஒரு தனியார் கம்பனியில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வந்துள்ளார்.

கடந்த 30ஆம் திகதி தீபாவளிக்காக விடுமுறையில் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை பெற்றோருடனும், நண்பர்களுடனும் கொண்டாடியுள்ளார்.

ஆனால் மும்பையில் இருந்து வந்ததில் இருந்து அவர், கைப்பேசியில் ஏதோ விளையாடியதாகவும், பிளேடால் தனது இடது கையை அறுத்துக்கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், மகனை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த தினேஷ், திடீரென படுக்கை அறையில் உள்ள மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து காவற்துறையினர் விசாரணையில் தினேஷின் கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை கைப்பற்றி ஆராய்ந்தனர்.

அதில் தினேஷ், ‘நீல திமிங்கிலம்’ விளையாடியதால் தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது.

மேலும் தினேஷ் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தையும் காவற்துறையினர் கைப்பற்றினர்.
அதில் அவர், “எனக்கு தெரியாமல் ஏதோ புதிய உலகம் தெரிகிறது. நான் மெல்ல மெல்ல எங்கோ எழுந்துகொண்டே போகிறேன்” என எழுதி இருந்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சென்னை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *