பிரதான செய்திகள்

முன்னால் பிரதி அமைச்சர் வைத்தியசாலையில்! கஞ்சாவுடன் கைது

முன்னாள் பிரதி அமைச்சர் கீதாங்ஜன குணவர்தன வாகன விபத்தில் காயமடைந்துள்ள நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு அவிஸாவளை  கொழும்பு வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதி அமைச்சர் அவிஸாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

அவர் பயணித்த சிற்றூந்து மற்றும் ஓர் சிற்றூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது, மோதுண்ட மற்றைய சிற்றூந்தை பரிசோதனை செய்த போது அதில், 4 கிலோ கிராம் கேரளா கஞ்சா இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய குறித்த சிற்றூந்தில் பயணித்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே அவர்கள் இன்று அவிஸாவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

முன்னாள் MP ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிடியாணை!

Editor

சஞ்சீவ கொலை – துப்பாக்கிதாரியின் வட்ஸ்அப் உரையாடல் வௌியானது. “”நீ, என் உயிர்…”!

Maash

காலி மேலதிக நகர முதல்வருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine